தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கால்நடை பராமரிப்பு செயலாளராக நியமனம்..!
ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது நிர்வாக ரீதியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் மாற்றம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சமக்ர சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக இருந்த ஆர்த்தி ஐஏஎஸ் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை செயலாளராக நியமனம்; இவர் சமக்ர சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.
- தேசிய சுகாதார திட்ட இயக்குநராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் - சுற்றுலா துறை இயக்குநராக மாற்றம்; இவர் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் செயல்படவுள்ளார்.
- தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் தம்புராஜ் ஐஏஎஸ் - தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குநராக நியமனம்; இவர் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார்.
சத்யபிரதா சாஹு ஐஏஎஸ் இடமாற்றம்
- தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹு ஐஏஎஸ் - கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை செயலாளராக நியமனம்
- சுற்றுலா துறை மேலாண் இயக்குநராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் - மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராக மாற்றம்; இந்த பதவியை விஜயராஜ் குமார் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
- தொழிலாளர் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் ஐஏஎஸ் - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளராக நியமனம்
இதில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹு கால்நடை துறை செயலாளர் பொறுப்பை வகிப்பார் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையொட்டி தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சத்யபிரதா சாஹுவின் துறையை முழுமையாக மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.