1. Home
  2. தமிழ்நாடு

புனித நீராடினார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்..!

1

உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்தும் ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் முக்கிய தலைவர்கள் பலரும் நீராடி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தனது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்துள்ளதாகவும் திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like