1. Home
  2. தமிழ்நாடு

மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி கடைகளை திறக்க தடை..!

1

நெல்லூர் மாவட்டம், பொதலகூரு அருகே உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவை காய்ச்சல் காரணமாக அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் நான்கு நாட்களுக்கு முன் இறந்துவிட்டன. 

இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் இறந்து போன கோழிகளின் உடல்களில் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கிடைக்க பெற்ற முடிவுகள் அடிப்படையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டு கோழிகள் இறந்து போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1

இந்நிலையில், கோழிகள் உயிரிழந்த பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் கோழி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள்  3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் மூன்று நாட்கள் வரை கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை. மேலும் வெளியூர்வாசிகள் கறிக்கோழிகளை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார். 

Trending News

Latest News

You May Like