சத்தீஸ்கர் நிருபர் கொலை வழக்கில் திருப்பம்..! இப்படி ஒரு கொலையை நாங்கள் பார்த்ததே இல்லை..!
சத்தீஸ்கரை சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர் (வயது 28). பத்திரிகையாளரான இவர் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அதாவது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இதனால் அடிக்கடி மாவோயிஸ்ட் தாக்குதலை நடத்துவார்கள்.
இந்நிலையில் தான் சத்தீஸ்கரில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் பிடித்து வைத்திருந்த சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை இவர் மீட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென்று முகேஷ் சந்திரகர் மாயமானார். இதுதொடர்பாக அவரது சகோதரர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று முகேஷ் சந்திரகரின் உடல் பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் கிடந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முகேஷ் சந்திரகர் பத்திரிகையாளரான இவர் சொந்தமாக யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பிஜப்பூரில் சாலை கட்டுமான ஊழல் தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையடுத்து சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது, அவரை சந்திக்க சென்ற இடத்தில் தான் முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் தான் முகேஷ் சந்திரகரை கடந்த 1ம் தேதி சந்திக்க அழைத்துள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து தான் செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் முகேஷ் சந்திரகர் நரக வேதனையை அனுபவித்து இறந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அவரது தலையில் 15 எலும்பு முறிவு, 4 நெஞ்சு எலும்பு முறிவு, கழுத்து எலும்பு முறிவு ஆகியவை இருந்துள்ளன.
கல்லீரல் 4 துண்டுகளாக இருந்துள்ளது. இதயம் வெளியே பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையை பார்த்ததே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.