1. Home
  2. தமிழ்நாடு

மூடப்படும் சென்னையின் மிகப்பெரிய திரையரங்கம் : வருத்தம் தெரிவித்த வைரமுத்து!

1

மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தின் வளர்ச்சியினால் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தலைநகரின் அடையாளம், சென்னையின் மிகப்பெரிய திரையரங்கம் என்ற பெயரை பெற்ற இந்த உதயம் திரையரங்கம் வியாபாரத்தில் பின் தள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த உதயம் திரையரங்கம் மூடப்பட இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து இத்திரையரங்கம் இடிக்கப்பட்டு வேறொரு 25 அடுக்கு மாடி கட்டிடம் எழுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது. அதனால் இதயம் கீறிச்சிடுகிறது. முதல் மரியாதை,சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்,ரோஜா என்று நான் பாட்டு எழுதிய வெற்றி படங்களை திரையிட்ட உதயம் திரைவளாகம் கண்டு என் கண்கள் கலை கண்ணீர் வடிக்கின்றன. இனிய அந்த கால தடயத்தை கடக்கும்போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விட்டவனின் பரம்பரை கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என்று சோகமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

உதயம் திரையரங்கம் குறித்து வைரமுத்து வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like