சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... ஒரு டிக்கெட் விலை எவ்வளவு?

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் வரவுள்ளது. இது தமிழ்நாட்டில் பயணத்தை எளிதாக்கும். சுற்றுலாவுக்கும் இது ரொம்ப உதவியாக இருக்கும். இந்த ரயில் 665 கி.மீ தூரத்தை கடக்கும். இது சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையேயான பயணத்தை வேகப்படுத்தும். இந்த ரயில் புதிய பாம்பன் பாலம் வழியாக செல்லும். சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த ரயில் வந்ததும் பயணம் ரொம்ப சுலபமாக இருக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு போக இது உதவியாக இருக்கும். முக்கியமாக சுற்றுலாவுக்கு இது ரொம்ப நல்லது.
ரயில் நிறுத்தங்கள் :
தாம்பரம்,
செங்கல்பட்டு
விழுப்புரம்
விருத்தாச்சலம்
திருச்சி
மானாமதுரை
மண்டபம்
இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது 618 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. தினசரி மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.40 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்கிறது. மறுமார்க்கத்தில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதில் ஸ்லீப்பர், ஏசி 3 டயர், ஏசி 2 டயர் ஆகிய பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பாம்பன் பாலம் வழியாக இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 665 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் ரயில் கடந்துவிடும். அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் என்கின்றனர்.
இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வழக்கமாக வந்தே பாரத் ரயில்களில் 1,000 ரூபாய்க்கு மேல் தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும் எக்ஸ்கியூடிவ் பெட்டிகளில் 2,000 ரூபாயை தாண்டிவிடுகிறது. இதனுடன் ஒருவேளை உணவும் அளிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
இதுபற்றி ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின் படி, ஏசி சேர் காரில் ஒரு டிக்கெட் விலை 1,400 ரூபாய் எனவும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் ஒரு டிக்கெட் 2,400 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யவும் ஆலோசித்து வருகின்றனர். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.