1. Home
  2. தமிழ்நாடு

இனி சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் வாரத்தில் 4 நாள் இயங்கும்!

1

நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர ரயிலாக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், ரயில் எண். 06067/06068 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் என வாரம் 4 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே சென்னை - நாகர்கோவில் பாரத் சிறப்பு ரயில் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



 

Trending News

Latest News

You May Like