1. Home
  2. தமிழ்நாடு

வெறும் கண்களாலேயே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்த்த சென்னை மக்கள்..!

1

பூமிக்கு மேற்பரப்புக்கு மேலே 408 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைந்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து அமைத்துள்ள இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியையும், விண்வெளி பரப்பையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நாளொன்றுக்கு 13 முறை இந்த விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பூமியை இந்த ஆய்வு மையம் சுற்றி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆய்வு மையமானது பூமிக்கு சிறிது அருகே இன்று இரவு சுற்றி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், அதனை வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். உலகின் பல பகுதிகளில் இந்த ஆய்வு மையத்தை மக்கள் பார்த்தனர். அதன்படி சென்னையில் இரவு 7.09 மணி முதல் 7.16 வரை 7 நிமிடங்கள் வரை இந்த விண்வெளி மையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர். 

Trending News

Latest News

You May Like