1. Home
  2. தமிழ்நாடு

சென்னைவாசிகள் 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்..!

1

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கும் அருகே கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல், மழை பாதிப்புகள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னைவாசிகள் 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், 94455 51913 என்ற எண்ணை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம். ‘Namma chennai’ செயலியை பயன்படுத்தியும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 1070, 1077 ஆகிய இரண்டு எண்களின் மூலம் புகார் அளிக்கலாம். வாட்ஸ்அப்பில், 94458 69848 என்ற எண்ணில் புகார் அளிக்க முடியும். அதேபோல வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 1077 என்ற எண்ணிலும், 0416 2258016 என்ற அலைபேசி எண்ணிலும் புகார் அளிக்க முடியும். வாட்ஸ்அப்பில், 93840 56214 என்ற எண்ணிலும், ‘TN alert’ மூலமாகவும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள், 1077 என்ற எண்ணிலும், 044 2766 6746, 044 2766 4177 ஆகிய அலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம். வாட்ஸ்அப்பில், 94443 17862, 94989 01077 எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Tamil Nadu State Disaster Management Authority) தொடர்பான உதவிகளுக்கு 1070, 1077 என்ற எண்களிலும், 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பறக்கும் ரயில் தொடர்பான புகார்களுக்கு: 044-25330952, 044-25330953 ஆகிய பொதுவான எண்களில் புகார் கொடுக்கலாம். தவிர்த்து, சென்னை சென்ட்ரல்: 044-25354140 & 22277, எழும்பூர்: 9003161811, தாம்பரம்: 8610459668, செங்கல்பட்டு: 9345962113, பெரம்பூர்: 9345962147 பகுதிகளுக்கு மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like