1. Home
  2. தமிழ்நாடு

சென்னைவாசிகளே அலர்ட்..! வானகரம் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து நகை பறிப்பு..!

Q

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வீட்டில் இருந்த பெண்ணை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் அணிந்திருந்த செயினை இளைஞர் ஒருவர் பறித்து சென்றிருக்கிறார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிசிடிவி காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் வரும் அந்த இளைஞர், பெண்கள் தனியாக இருக்கும் வீடாக பார்த்து காலிங் பெல்லை அழுத்துகிறார். காலிங் பெல்லை அழுத்திவிட்டு சில அடி தூரங்கள் தள்ளி செல்லும் அவர், கதவு திறக்கப்பட்ட பின் நொடிகள் அந்த பெண்களுடன் பேசுகிறார்.
அதன்பின் அந்த இளைஞர் அருகில் வரும் போது, வீட்டில் இருந்த பெண் உடனடியாக கதவை அடைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த இளைஞர் கதவை வேகமாக திறந்து பெண்ணை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் உள்ள தங்க செயினை அறுத்து செல்கிறார். அதன்பின் சாதாரணமாக நடந்து வெளியேறுகிறார். இந்த வீடியோ அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், வானகரம் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். சாதாரணமாக காலிங் பெல்லை அழுத்திவிட்டு செயின் பறிப்பில் ஈடுபடுவது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like