1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம் : இன்று சென்னை - செங்கல்பட்டு மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்..!

1

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.  இதனால் இன்று சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.25 மணி, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும். 

மறு மார்க்கமாக இன்று காலை 11.20 மணி, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.

மேலும் பயணிகள் வசதிக்காக விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (எண்.22869, 22870) நாளை 13-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like