1. Home
  2. தமிழ்நாடு

சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை - பெங்களூரு ரயில் சேவை பாதிப்பு..!

Q

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த சரக்கு ரயில் கார்களை ஏற்றிச் சென்ற நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய 3 பெட்டிகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக சென்னை - பெங்களூர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்ட விபத்தால் சென்னை - பெங்களூர் செல்லும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. லால்பாக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like