இனி சென்னை டூ பெங்களூரு 2.5 நேரத்தில் செல்லலாம்..!
விரைவில் 5 மெகா அதிவிரைவுச் சாலைகள் (எக்ஸ்பிரஸ்வே) செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இனிமேல் நமது பயண அனுபவம் முற்றிலும் புதிய மாற்றங்களுக்கு உள்ளாகப் போகிறது.
அடுத்த 12 மாதங்களில் முழு செயல்பாட்டுக்கு வரவுள்ள 5 அதிவிரைவுச்சாலைகள் பற்றிய விபரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் டெல்லி - மும்பை அதிவிரைவுச்சாலை, இந்தியாவின் தலைநகரை பொருளாதார தலைநகரோடு இணைக்கிறது. இதன் பணிகள் பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. 1,386 கி.மீ தூரமுள்ள இந்தச் சாலை, டெல்லி-மும்பை இடையேயுள்ள 180 கி.மீ தூரத்தை குறைக்கிறது. இதன் மூலம் பயண நேரம் வெறும் 12 மணி நேரமாக குறையும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் மற்றொரு சாலைதான் பெங்களூரு – சென்னை அதிவிரைவுச்சாலை. ரூ.17,00 கோடி பொருட் செலவில் கட்டப்படும் இந்தச் சாலை 262கி.மீ தூரம் கொண்டது. இந்தச் சாலை பயண நேரத்தை இரண்டு மணி நேரமாக குறைக்கிறது. இனிமேல் விமானத்தில் செல்வதை விட விரைவாக பெங்களூருக்கு சென்னையிலிருந்து சென்றுவிடலாம்.
மாசு கட்டுப்பாடு காரணமாக பல சிக்கல்களை சந்தித்து வந்த துவாரகா அதிவிரைவுச் சாலை பணிகள் கோடை காலத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியிலுள்ள துவாரகாவை ஹர்யானாவின் குருகிராமோடு இணைக்கிறது இந்தச் சாலை. 29கி.மீ தூரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற நெடுஞ்சாலை காரணமாக இந்திர காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல இப்போது மாற்றுப் பாதை கிடைத்துள்ளது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 8-ல் போக்குவரத்து நெரிசல் குறையும்.
669கி.மீ தூரம் கொண்ட இந்த அதிவிரைவுச்சாலை, டெல்லி மற்றும் அம்ரிஸ்டர் இடையேயான பயண தூரத்தை நான்கு மணி நேரமாக குறைக்கிறது. 2024-ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் இந்த சாலை, அம்ரிஸ்டரில் உள்ள தங்க கோவில், தாரன் தாரனில் உள்ள குருத்வாரா தர்மா சாஹிப் மற்றும் காத்ராவில் உள்ள வைஷ்னவ தேவி கோவில் போன்ற ஆன்மீக தளங்களை இணைக்கிறது.
டெல்லி – டேராடூன் அதிவிரைவுச் சாலையின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ராஜாஜி தேசிய பூங்கா இந்த வழியில் இருப்பதால், அங்குள்ள வனவிலங்குகளை காக்கும் பொருட்டு ஆசியாவிலேயே நீளமான வனவிலங்கு நடைபாதையை NHAI கட்டியுள்ளது. இந்த அதிவிரைவுச் சாலையில் பயணிப்பதால், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான பயண தூரம் மூன்று மணி நேரமாக குறைகிறது.
.png)