சென்னை தியேட்டருக்கு 75 மடங்கு அபராதம்..!

அப்போது, அனைத்து வரிகளையும் சேர்த்து டிக்கெட் கட்டணமாக 159 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்பட்டுள்ளது. காசினோ திரையரங்கம் அரசு நிர்ணயித்த திரையரங்க கட்டணத்தை விட கூடுதல் கட்டண வசூலித்திருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சென்னை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தேவராஜன் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய தலைவர் கோபிநாத் தலைமையிலான அமர்வு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தது முறையற்ற வணிகம் என்றும், பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு காசினோ திரையரங்கம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், இழப்பிட்டை 2 மாதத்தில் வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தவறினால் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் இழப்பீடு சேர்த்து வழங்க வேண்டும் என ஆணையிட்டனர்.