1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

1

மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதி  நினைவு நாளையொட்டி  அமைதிப் பேரணி தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ,  அங்கிருந்து தொடங்கிய பேரணி கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது. இந்த அமைதிப் பேரணியில்  சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான  ஆலப்பாக்கம் சண்முகம் பங்கேற்றிருந்தார். அப்போது   திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

stalin

இந்நிலையில் மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான  ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவையொட்டிமுதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான திரு. ஆலப்பாக்கம் கு. சண்முகம் சண்முகம் அவர்கள் அவர்கள் இன்று (7-8-2023) கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன்.

மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர். கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like