சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!

இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 32 ரன்கள் எடுத்த போது தோனி ஸ்டம்பிங்கில் வெளியேற்றினார். தேவ்தத் படிக்கல் 27 ரன் எடுத்த போது அஸ்வின் பந்தில் கெயிக்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விராட் கோஹ்லி 31 ரன்கள் எடுத்து இருந்த போது, நூர் அஹமது பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லியாம் லிவிங்ஸ்டன் 10, ஜிதேஷ் ஷர்மா 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
18வது ஓவரில், அரைசதம் அடித்த கேப்டன் ரஜத் படிதர் 51 ரன்னில் அவுட்டானார். இவரை பதிரானா அவுட்டாக்கினார்.அதே ஓவரில், இவரது பந்தில் க்ருனல் பாண்டியா ரன் எடுக்காமல் அவுட்டானார்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் நூர் அஹமது 3, பதிரானா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை அணி வெற்றி பெற 197 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.