1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன சென்னைவாசிகள்..!!

தமிழக முதல்வரின் செயலால் நெகிழ்ந்து போன சென்னைவாசிகள்..!!


தமிழ்நாட்டில் ஓமைக்ரான் காரணமாக கொரோனா 3-ம் அலை ஏற்பட்டுவிட்டதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இதனால் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளி விட வேண்டும் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு இருந்தார்.

சென்னையில் 40 சதவிகிதம் பேர்தான் மாஸ்க் அணிந்து உள்ளனர். வேறு யாரும் மாஸ்க் அணிவது இல்லை. மாஸ்க் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். வார்டுக்கு 100 பேர் வீதம் ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்கள் களமிறக்கப்பட்டு மாஸ்க் அணியாத நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாஸ்க் மட்டுமே கொரோனா பரவலை தடுக்கும். ஓமைக்ரான் தீவிரத்தை மாஸ்க் மட்டுமே குறைக்கும் என்று அரசு சார்பாக தீவிரமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல், கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றும் கண்காணிப்பின் போது பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வாங்கியதன் மூலம் இவ்வளவு தொகை திரட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் மொஅபராதம்த்தம் 2,603 பேரிடமிருந்து ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இன்று சென்னையில் முககவசம் அணியாத மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முககவசங்களை வழங்கினார். அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையில் இறங்கி மாஸ்க் வழங்கினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் இருந்தார். கையில் மாஸ்க் பாக்ஸ் ஒன்றை வைத்துக்கொண்டு முதல்வர் எல்லோருக்கும் மாஸ்க் வழங்கினார்.

மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அருகில் சென்று.. இப்படி வெளியே வர கூடாது. இது பாதுகாப்பு இல்லை. கொரோனா விதிகளை கடைபிடியுங்கள் என்று கூறினார். அதோடு தனது கையால் அவர்களுக்கு மாஸ்க் அணிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த செயல் அங்கிருந்த மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. முதல்வர் இப்படி மக்களுக்கு மாஸ்க் அணிவித்து வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like