1. Home
  2. தமிழ்நாடு

சென்னை PSBB பள்ளி ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை – கனிமொழி எம்.பி.

சென்னை PSBB பள்ளி ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை – கனிமொழி எம்.பி.


சென்னை கே கே நகரில் உள்ள PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த புகார் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியரான ராஜகோபாலன், பாலியல் நோக்கங்களோடு மாணவிகளை அணுகியிருப்பதை, முன்னாள் மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட இப்பிரச்னை கவனத்துக்கு வந்திருக்கிறது.

மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஜோக்குகளை உதிர்ப்பது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் ஆன்லைன் வகுப்புகளில் தோன்றுவது என ராஜாகோபாலன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் திகைக்கச் செய்கின்றன;

இந்நிலையில், மக்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகம் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது டுவிட்டரில், “சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


இந்த பள்ளிக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு #BanPSBBschool, #JUSTICEFORPSBB என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு வருகின்றனர்

Trending News

Latest News

You May Like