போலீசாருக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை கமிஷனர்... இனி இவங்களுக்கு எல்லாம் நைட் ஷிப்ட் கிடையாது..!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய போலீசாரின் வயது மூப்பையும், நீண்ட பணி காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து போலீசாருக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
59 வயதை எட்டும் காவலர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஒரு வருட காலத்திற்கு, இரவு பணியில் இருந்து விலக்கு அமலில் இருக்கும். இந்த உத்தரவை அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும்.