1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மேயர் அதிரடி : இனி ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 60 லட்சம்..!

1

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.. கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ.4,464 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இம்முறை சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் ரூ.5,1245.52 கோடி மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து, விளையாட்டு, குப்பைகளை அகற்றுகள், இளைஞர்கள் நலன், பூங்கா பராமரிப்பு, கல்வி, மாணவர்கள் நலன், பேருந்து முனையங்கள் மேம்பாடு, சாலை பராமரிப்பு என்பது தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 இடங்களில் ஃபுட் கோர்ட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் வடசென்னையில் 2 பேட்மிண்டன் கோர்ட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து மேலாண்மைக்காக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன நெரிசல் குறைவதோடு, கூடுதல் வருவாயும் மாநகராட்சிக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதாவது கவுன்சிலர்களுக்கு தங்களின் வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் அளிக்கப்படும். அதனை நடப்பு ஆண்டில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like