1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மெரினா கடற்கரை தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு..?

1

சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா  தலைமையில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் துணை மேயர், ஆணையர் உள்பட பலர் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அதில், சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் மற்றும் புது கடற்கரைகளின் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையை ஒரு வருட காலத்திற்கு தூய்மை செய்ய சுமார் ஏழு கோடி ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற நான்கு கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மை பணிக்காக சுமார் 4 கோடி ரூபாய்க்கும் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like