சென்னை கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு சிறப்பு நேரலை !

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்து மூடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற ஆலயங்களின் முக்கிய பூஜை வழிபாடுகள் அனைத்தும் நேரலை மூலம் மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர், திருவேற்காடு, போன்ற பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை https://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற YouTube channel- லில், பக்தர்கள் நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம். அதிலும் குறிப்பாக நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து சந்திரசேகரர் உள் புறப்பாடும் பக்தர்களின் கோரிக்கையின் படி ஒளிபரப்பப்படும்.
அதேபோல், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலின் பிரதோஷ வழிபாட்டினை பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தபடியே கண்டுகளிக்க முடியும். அதில் நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம் கண்டு களிக்கலாம்.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சிகள் https://youtu.be/r-g-M6sG9LY என்ற யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. அந்தந்த கோவில் இணையதளங்கள் மூலம் பிரதோஷ நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தபடியே கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.