சிறுநீரில் இருந்து மின்சாரம்- அசத்தும் ஐ.ஐ.டி மாணவர்கள்..!!

இதனுடைய முதற்கட்ட ஆய்வின் மூலம், சிறுநீரை தண்ணீராக மாற்றி பயன்படுத்துவதன் மூலம் வெப்பமயமாதம் குறையும். இந்த முறை வெற்றி அடையும் பட்சத்தில், பொது கழிப்பறை மேலாண்மையை சிறப்பாக பராமரிப்பதற்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் சிறுநீரை மறுசுழற்சி செய்து தண்ணீராக பயன்படுத்த முடியும். அதை குறிப்பிட்ட அளவில் குவளையில் அடைத்து அம்மோனியா உப்பு மற்றும் ஆக்சைடு சேர்த்தால் ஹைட்ரஜன் கிடைக்கிறது. அதை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்.
இதன்மூலம் புவி வெப்பமயமாதல் குறையும் என்றும், மூன்று ஆண்டாக நடத்தப்பட்ட கார்பன் சேலஞ்ச் போட்டியில் இந்த ப்ராஜெக்ட்டுக்கு நிதி உதவியும் அனுமதியும் கிடைத்துள்ளது. இது ஒருவேளை நடைமுறைக்கு வந்தால்
அசுத்தமாக காணப்படும் பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக மாறிவிடும். ஒரு லிட்டர் சிறுநீரில் இருந்து 2.32 கிலோ வாட் ஹவர் மின்சாரம் தயாரிக்கலாம். தயாரிப்பு செலவு என்பது 10 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று மாணவர்கள் கூறினர்.