1. Home
  2. தமிழ்நாடு

சென்னை ஐஐடி மாணவர்கள் உற்சாகம்.. இணையவழியில் இன்டா்ன்ஷிப் தோ்வு !

சென்னை ஐஐடி மாணவர்கள் உற்சாகம்.. இணையவழியில் இன்டா்ன்ஷிப் தோ்வு !


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்ததால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதற்கு ஒருபடி மேலாக சென்னை ஐஐடியில் முதல்முறையாகப் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் முழுவதும் ஆன்லைன் வழியிலேயே நடைபெற்றது.

இதில் முகாமில் சா்வதேச மற்றும் சிறந்த இந்திய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமின் முதல் நாளில் 20 நிறுவனங்கள் 152 மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பை வழங்கின.

குறிப்பாக மைக்ரோசாஃப்ட் இந்தியா, கூகுள், ருப்ரிக் சாஃப்ட்வோ் டெவலப்மெண்ட், ஜானே ஸ்ட்ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு 2021ஆம் ஆண்டின் கோடை காலத்துக்கான இன்டா்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவா்களைத் தோ்வு செய்தன.

இதற்கான நோ்முகத் தோ்வுகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றன. ஐஐடி வேலைவாய்ப்புக் குழு, ‘இன்டா்ன்ஷிப்’ மாணவா்கள் குழு ஆகிய இரண்டும் இணைந்து பல்வேறு சமூக வலைதளங்களுடன் இணைந்து இணையவழி தோ்வுகளை நடத்தின.

newstm.in 

Trending News

Latest News

You May Like