1. Home
  2. தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றம் நச் தீர்ப்பு..! பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது குற்றமாகாது...!

1

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தனக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், அந்த மனுதாரர் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து மனைவியை விட்டு பிரிந்து, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருடைய மனைவியோ தங்கள் இருவரையும் சேர்த்து வைக்கக் கோரி மற்றொரு வழக்கு தொடர்ந்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த கரூர் நீதிமன்றம், அவரது மனைவியின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், இந்த தீர்ப்பை தான் ஏற்க மறுப்பதாகவும், தனது வழக்கை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரருக்கும், அவருடைய மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2வது திருமணம் என்றும் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் மனுதாரர் தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றும் கூறினர்.

அதாவது, தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளதாகவும், அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குறிப்பிடுகிறார். மாமியாரும் தன்னை மதிக்கவில்லை என்றும் அதிமாக செலவு செய்கிறார் என்றும் அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார் என்றும் அடுத்தடுத்து குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், வீட்டு வேலைகளை செய்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியவை என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தை மனுதாரரின் மனைவி பார்ப்பதாக கூறுவதை மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். திருமணத்துக்கு பின்பு ஒரு பென் கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், திருமணமான பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.  இதனால், மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் சுய இன்பம் செய்வதை குற்றமாக கருத இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like