1. Home
  2. தமிழ்நாடு

வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்கிய சென்னை மாணவி..!

1

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. நிவாரண நிதி திரட்டுவதற்காக, தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார்.

அதன் மூலம் திரட்டிய நிதி மற்றும் தன் சேமிப்பில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். 

சிறுமி பரதநாட்டியம் ஆடிய, வீடியோவை பினராய் விஜயனிடம் காண்பித்தார். முதல்வர் பினராயை சிறுமி சந்தித்த வீடியோ, டுவிட்டர் வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like