சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..! இனி மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை..!

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014, 2015- ன் கீழ் பதிவுச் செய்திருக்க வேண்டும். பதிவுச் செய்யப்படாத விடுதிகள், பதிவுச் செய்வதற்கு tnswp.com என்ற இணையதளம் மூலமாகப் பதிவுச் செய்யலாம்.
மேலும், அறக்கட்டளை பதிவுப் பத்திரம் மற்றும் கட்டிட வரைப்படம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ஆகிய ஆவணங்களுடன் வரும் அக்டோபர் 30- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்; பதிவுச் செய்யப்படாத விடுதிகள் மீது வழக்குப்பதிவுச் செய்து, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.