நிறுவனங்களுக்கான COMPANY TAX உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு..!

தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பாணையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மும்மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக நூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரையும், அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரையிலும் நிறும வரி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உயர்த்தப்பட்டுள்ள நிறும வரி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.