1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் !

சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் !


சென்னை கோவளம் வடிநிலப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பொது மக்கள் எதிர்க்க கூடாது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி, கோவளம், பனையூர் போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், சாலைகளின் ஓரம் வடிகால் அமைக்கும் பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி தொடங்கியது. இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சந்தித்து பேசினார். அப்போது, சென்னை பெருநகர மாநகராட்சி சமநிலையான நில அமைப்பை கொண்டுள்ளதால் மழை காலங்களில் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதாகவும், இதை எதிர்க்கொள்ளதான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் !

கோவளம் வடிநிலைப்பகுதியில் மொத்தம் உள்ள நிலப்பரப்பில் 0.69% சதவிகிதம் தான் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும், 2015-ம் ஆண்டு பெய்த அளவுக்கு இந்தாண்டு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் செயற்கையாக நிலத்தடி நீரை அதிகளவில் கொண்டு செல்லும் கருவியும் அமைக்கப்பட இருப்பதாகவும், இதனால் 326.1 மிலி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். இந்த மாதிரியான திட்டங்களை எதிர்த்து போராடினால், வெளிநாட்டு வங்கிகள் கடன் உதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் இந்த திட்டத்தால் சாலைகளில் நீர் தேங்காது. கடந்த 5 ஆண்டுகளாக பெருமழை இல்லை என்பதால் மக்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பதாகவும், இந்த திட்டத்தின் பயனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல, மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலப்பதை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Trending News

Latest News

You May Like