இன்று சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை நேற்றும் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று (அக். 2) சென்னை - அரக்கோணம், சென்னை - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.