1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட 'சென்னை 600028 II' பட நடிகை..!

1

‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா அல்தாப்.சனா மலையாளத்தில் துல்கர் சல்மான் தங்கையாக நடித்துள்ளார். நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தவர்.

இந்நிலையில் நடிகை சனா அல்தாப், நடிகர் ஹக்கிம் ஷாஜகானை நேற்று முன்தினம் (மே 17) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் எளிய முறையில் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது. ஹக்கிம் 'கடகன்', 'பிரணயா விலாசம்', 'தி டீச்சர்' மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் நடிகை சனா அல்தாப், விக்ரமாதித்யன், ராணி பத்மினி, ஒடியன் உள்ளிட்ட மலையாள படங்களிலும், சென்னை 600028 II, ஆர்கே நகர், பஞ்சராக்ஷரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 

1

Trending News

Latest News

You May Like