மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு - 2 பேர் பலி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து கம்பெனியில் ரசாயன வாயு கசிந்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.
பரவாடா பகுதியில் உள்ள மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீரென ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் சிலர் ரசாயன வாயுவை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர். இதில் 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயுக்கசிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் 30 பேர் வரை பணியில் இருந்ததாக தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பெனி மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து பரவாடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
newstm.in