ரசிகர்களின் செயலால் கோபமடைந்த பிரபல ராப் பாடகி என்ன செய்தார் பாருங்க..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் பிரபல ராப் பாடகி கார்டி பி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரை 169 மில்லியன் பயனர்கள் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடி கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர்களின் அருகே வந்து அவர் பாடியபோது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார். இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது கும்பலாக சேர்ந்து இளைஞர்கள் தாக்கினார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
கச்சேரியின் போது பாடகர்கள் ரசிகர்களால் தாக்கப்படுவது ஒன்றும் புதிதில்லை. கடந்த மாதம் வேல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.
Cardi B throws microphone at audience member who threw a drink at her. pic.twitter.com/alLgHMFshb
— Pop Base (@PopBase) July 30, 2023