1. Home
  2. தமிழ்நாடு

உடனே செக் பண்ணுங்க..! இன்றே உங்கள் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை!!

1

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் பலனடைந்தனர்.  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான 1000 ரூபாய் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றே மக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like