உடனே செக் பண்ணுங்க..! ஆதாரில் உங்கள் மொபைல் எண் இருக்கா?

ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட அப்டேட்களை நாம் ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தே செய்ய முடியும். மேலும் புகைப்படம் மற்றும் மொபைல் எண் மாற்றுதல் போன்ற மாற்றங்களை கட்டாயம் இ – சேவை வாயிலாக மட்டுமே மேற்கொள்ள முடியும். இதில் புகைப்படத்தை மாற்ற https://uidai.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் அப்டேட் என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதில் வரும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறகு விண்ணப்பத்தினை அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்த்து விவரங்களை புதுப்பிப்பர். அடுத்ததாக ஆதார் கார்டில் உங்களுடைய மொபைல் எண் தான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
தற்போது ஆதாரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை இணைத்து அதன் வாயிலாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதனால் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது ஆதாரில் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.