1. Home
  2. தமிழ்நாடு

உடனே செக் பண்ணுங்க..! இன்று முதல் UPI பரிவர்த்தனை வேலை செய்யாமல் போகலாம்! காரணம் இதுதான்!

1

NPCI புதிய விதியின்படி அனைத்து UPI ஐடிகளும் கண்டிப்பாக எண் மற்றும் எழுத்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். அதாவது @, !, அல்லது # போன்ற சிறப்பு எழுத்துகளைக் கொண்ட எந்தவொரு UPI ஐடியும் தானாகவே நிராகரிக்கப்படும்.

 

UPI பயனர்கள் பெரும்பாலான சிறப்பு எழுத்துகள் இல்லாத ஐடியை பயன்படுத்தினாலும், ஒருசிலர் இதுபோன்ற சிறப்பு எழுத்துகளுடன் UPI ஐடியை பயன்படுத்துகின்றனர். இதற்குக் தீர்வு காணும் வகையில், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த விதியை கடுமையாக அமல்படுத்த NPCI முடிவு செய்துள்ளது.புதிய விதிகளின்படி சிறப்பு கேரக்டர்களான #, @, $, *, என்பது போன்றவை இடம்பெற்றுள்ள யுபிஐ ஐடிக்கள் பிப்ரவரி 1 ஆம்தேதி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஐடிக்கள் உருவாக்கும்போது இந்த சிறப்பு கேரக்டர்கள் இடம்பெறாது.

 

தினசரி பரிவர்த்தனைகளுக்கு UPI ஐ நம்பியுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்த மாற்றம் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். சிறப்பு எழுத்துகளுடன் கூடிய UPI ஐடியை பயன்படுத்தி பணம் செலுத்த முயற்சித்தால், பரிவர்த்தனை தோல்வியடையும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் ஃபோன் எண் 1234567890 என வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட UPI ஐடி இருந்தால், உங்களது செல்லுபடியாகும் UPI ஐடி 1234567890oksbi என இருக்க வேண்டும். 1234567890@ok-sbi என இருந்தால் அது செல்லுபடி ஆகாது. @ மற்றும் - என்ற  இரண்டு சிறப்பு எழுத்துகள் அதில் இருப்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

பிப்ரவரி 1 முதல் UPI பரிவர்த்தனை தோல்வி அடைவதைத் தவிர்க்க, பயனர்கள் சில எளிய வழிமுறைகளைப் கவனத்தில் கொள்ளலாம். முதலில், UPI செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

UPI செயலி புதிய விதிகளுக்கு இணக்கமாக உள்ளதா என்று உறுதியாக தெரியவில்லை என்றால், அந்தச் செயலியின் வாடிக்கையாளர் சேவையை அணுகலாம். ஆப்பிளின் ஆப் ஸ்டோர் அல்லது கூகுளின் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட UPI அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு வழிகளில் டவுன்லோட் செய்த செயலிகள் NPCI விதிகளுக்கு இணங்காமல் போகலாம்.UPI ஐடிகளில் சிறப்பு எழுத்துகளை தடை செய்வதற்கான முடிவு, UPI பரிவர்த்தனை அமைப்பைத் தரப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும்.

Trending News

Latest News

You May Like