1. Home
  2. தமிழ்நாடு

உடனே செக் பண்ணுங்க..! உரிமைத் தொகை ரூபாய் 1000 வந்துவிட்டதா..?

1

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் அங்கீகாரம் தரும் விதமாகவும்  மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம் என்பது கொண்டுவரப்பட்து.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23 ஆகஸ்ட் 4 ஆகியத்தில் தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதன் பயனாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 திட்டத்தின் இந்த மாதத்திற்கான தவணை காலை 10 மணி அளவில் பயனாளர்களின் வங்கி கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாதமாதம் 15-ம் தேதி திட்டத்திற்கான ரூ. 1000 வங்கி கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்ட நிலையில்  2023  செப்டம்பர் முதல் தற்போது வரை ஒன்பது தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாவது தவணை இன்று உங்கள் கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் 2.5 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உங்கள் வீட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி ரூபாய் 3000 மொத்தமாக வரும். அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம் புதிதாக, தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன என்பது குறிபிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like