சீமானுக்கு செக்..! நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது - நீதிமன்றம் அதிரடி..!

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வல்லுறவு செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்தார். 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு அளித்திருந்தார். அதில் 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்ப பெற்று கொள்வதாக அளித்த கடித்தத்தின் அடிப்படையிலும், விசாரணை அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இது ஐ.பி.சி 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட (பாலியல் வன்கொடுமை) வழக்கு என தெரிவித்தார்.
இதையடுத்து சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அடுத்தமுறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து அன்றே உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி வழக்கு (பிப்ரவரி 17)விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், “2008ல் மதுரை கோயிலில் சீமானும், விஜயலட்சுமியும் மாலை மாற்றிக்கொண்டனர்.பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் தொடர்பு வைத்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக சீமான் கூறியதால் முதலில் விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.மேலும் சீமான் வழக்கை சந்திக்க வேண்டும். விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் 12 வாரத்தில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி சீமானின் முதல் மனைவிதான் விஜயலட்சுமியா..? என கேள்வியெழுப்பினார். மேலும் வழக்கை அவர் எதற்காக திரும்ப பெற்றார். தொடர்ந்து புகார்தாரர் வழக்கை திரும்ப பெற்றாலும், காவல்துறை வழக்கை தொடர்ந்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என நீதிபதி கூறினார். சர்வசாதாரணமாக இந்த வழக்கை முடித்து விடமுடியாது என கூறி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன். சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை 3 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வளசரவாக்கம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.