1. Home
  2. தமிழ்நாடு

திமுகவிற்கு செக்..! தேர்தல் வாக்குறுதி 181 ஞாபகம் இருக்கா? வந்து 4 வருஷம் முடியப்போகுது..

1

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கூறியதவது, அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக இதோடு 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்றோம். தற்போதும் 12,500 ரூபாய் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. இதில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு என எந்த சலுகையுமே கிடையாது என்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.
 

எனவே, இனியாவது அடிப்படை சம்பளம், அகவிலைப்படியுடன் கூடிய காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே இனி எஞ்சியுள்ள காலத்தில் எங்களின் குடும்பத்தை நல்லபடியா பாத்துக்கொள்ள முடியும். வர போகின்ற பட்ஜெட்டில் இதற்கான நிதியை முதல்வர் ஒதுக்க வேண்டும். திமுகவின் 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு முடிய உள்ளது. ஆனாலும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே இனியும் தாமதம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 47,000 பேர் பணியிடங்களை நிரந்தரம் செய்து தற்போது ஆணையிட்டதை போல், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களையும் நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும் என எஸ் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like