“வாடகை தராமல் ஏமாற்றிவிட்டார்” : பிரபல நடிகை மீது டிரைவர் குற்றச்சாட்டு!

கோவாவுக்கு காரில் பயணம் செய்துவிட்டு வாடகைப் பணத்தை கொடுக்காமல் நடிகை முமைத்கான் ஏமாற்றிவிட்டதாக கார் ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போடும் நடிகை முமைத்கான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடித்து வரும் இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.
கோவா பயணம் செய்ததற்கான பணத்தை இவர் கொடுக்கவில்லை என்று ராஜூ என்ற டிரைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நடிகை முமைத்கான் மூன்று நாள் பயணமாக கோவாவுக்குச் செல்ல தனது காரை வாடகை எடுத்தார் என்றும், ஆனால், எட்டு நாட்கள் கோவாவில் தங்கியும் எனக்கு தரவேண்டிய 15 ஆயிரம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் முமைத்கானின் கோவா முகவரி, சுங்கக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை வெளியிட்டுள்ளார் ராஜூ. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in