1. Home
  2. தமிழ்நாடு

சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

Q

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது.
யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர்.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஏப்.,25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Trending News

Latest News

You May Like