இன்று ஆவணி வளர்பிறை சஷ்டி : "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்..!
முருகன் “வெற்றி” கடவுள் எனப் போற்றப்படுகிறார். வள்ளி, தெய்வானை இருவருடனும் இருக்கின்ற சுப்ரமணிய சுவாமியை சஷ்டி நாட்களில் பூஜை செய்தால் வாழ்வில் தடைகள் கரையும். தொழிலில் ஏற்படும் இடையூறுகள், போட்டியாளர்களின் பிரச்சனைகள், வியாபாரத்தில் நஷ்டம் போன்றவை குறைந்து, செல்வ வளமும், நிலையான முன்னேற்றமும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
காலை நேரம் விரதம் தொடங்கவும். சுத்தமாக நீராடி, வெள்ளை அல்லது குங்குமப்பூ நிற உடை அணிந்து கொள்ளவும். முருகன் படத்தை நன்கு சுத்தம் செய்து சந்தனம், ஜவ்வாது கலந்து தடவி, குங்குமம் வைக்கவும். அவருடைய வேல் வைத்திருந்தால் அதற்கும் இதுபோல் செய்யவும். முருகனுக்கு செம்பருத்தி, கந்தள், பூவாம்பூ போன்ற சிவப்பு நிற மலர்கள் சாற்றி அலங்காரம் செய்யவும். பால், பனங்கருப்பட்டி, மிளகு வெற்றிலை, பால் பாயசம், கடலை பருப்பு, கொண்ட சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பின்னர் ஆறுமுகனுக்கு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பின் கீழ் வரும் முருகனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
முருகன் மந்திரம் :
“ஓம் சரவணபவாய நம:”
அது மட்டுமல்லாமல் கந்த சஷ்டி கவசம், சுப்பிரமணிய சுப்ரபாதம், வேல்மாறல் ஆகியவற்றை பக்தியுடன் பாராயணம் செய்யவும். முருகன் பற்றிய புராண கதைகளையும் நீங்கள் படிக்கலாம். இவ்வாறு நாம் படிக்கும் பொழுது, தெய்வத்தினுடைய அருள் கிடைப்பதாக ஐதீகம். விரதம் மேற்கொள்பவர்கள் முடிந்தவரை பழம், பால், நீர் ஆகிய எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். காலை முதல் விரதம் இருந்து மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து பின் விரதத்தை முடிக்கலாம். இது பொதுவான வழிபாடு முறையாகும்.
தொழில் முன்னேற்றத்திற்கான சிறப்பு வழிபாடு:
முருகனின் வேலுக்கு சிவப்பு குங்குமப்பூ பூசி ஆராதிக்கவும். தொழில் அல்லது வியாபாரத்தில் பயன்படுத்தும் கணக்கு புத்தகம், விசை, ஒப்பந்தக் கடிதம் போன்றவற்றை முருகன் பாதத்தில் இந்த நாளில் வைத்து பூஜை செய்து வணங்கி பின்னர் பயன்படுத்தவும். “ஓம் வேலாயுதாய நம:” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.
ஆவணி மாத வளர்பிறை சஷ்டியில் பக்தியுடன் முருகனை இப்படி விரதம் இருந்து வழிபட்டால் தொழிலில் வரும் இடையூறுகள் நீங்கி வெற்றி பாதை திறக்கும். முருகனின் அருளால் தடைகள் அகன்று, செல்வ வளம் பெருகி, தொழில் வாழ்வு உயர்ச்சி அடையும். இது தவிர வேறு ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் முருகனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். வளர்பிறை சஷ்டி அன்று கந்தசஷ்டி கவசம், சுப்ரமணி புஜங்கள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், வேல்மாறல் போன்ற ஏதாவது ஒரு பாடலை பாராயணம் செய்வது சிறப்பு. இது எதுவும் முடியாதவர்கள், "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவோ, எழுதவோ செய்யலாம். இதுவும் அதிக பலன் தரக் கூடிய வழிபாடு ஆகும்.f
.png)