1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் வரும் மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் UPI வரை..!

1

கிரெடிட் கார்டு :

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான மாற்றம் வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கி பல பிராண்டட் கிரெடிட் கார்டுகளில் இலவச விமான விபத்து காப்பீட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. யூகோ வங்கி, செண்ட்ரல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை சில எலைட் மற்றும் பிரைம் கார்டுகளில் ரூ. 1 கோடி அல்லது ரூ. 50 லட்சம் காப்பீட்டை வழங்கின. ஆனால் இனி அந்தச் சலுகை கிடைக்காது.

சிலிண்டர் விலை :

ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வருவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 60 ரூபாய் குறைக்கப்பட்டது. அதேபோல, ஆகஸ்ட் 1ஆம் தேதி சிலிண்டர் விலை மாறுமா அல்லது அப்படியே இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
 

யூபிஐ பரிவர்த்தனை :


யூபிஐ விதிகள் ஆகஸ்ட் 1 முதல் மாறுகின்றன. அதன்படி, கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளில் யூபிஐ பரிவர்த்தனைகளில் மாற்றம் வருகிறது. இதன்படி, உங்கள் யூபிஐ செயலியில் இருந்து ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். மேலும்,ஆகஸ்ட் 1 முதல் ஆட்டோமெட்டிக் ஆக பணம் டெபிட் ஆவதற்கான நேரங்கள் (AutoPay Timings) ஒதுக்கப்படும். அதாவது யுபிஐ ஆப்களின் வழியிலான ஆட்டோபே பரிவர்த்தனைகள் ஆனது குறிப்பிட்ட 3 வகையான நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும்: காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு. இதேபோல யுபிஐ ஆப் வழியாக பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Daily Balance Check Limit): ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே ஏஎன்றும், மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் (Linked Bank Account View Limit): ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே என்றும் கட்டுப்படுத்தப்படும். மேலும் பேமண்ட் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு வரம்பு (Transaction Status Check Limit): குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளியுடன், நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸ்-ஐ 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இதேபோல பேமண்ட் ரிவர்சல் கேப் (Payment Reversal Cap): 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணத்தை மாற்றுவதற்கான கோரிக்கைகளை எழுப்பலாம், 1 அனுப்புநருக்கு 5 என்ற அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவைகள் எல்லாமே ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

வங்கி விடுமுறை:

ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலில் வங்கிகளுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே வங்கி தொடர்பான வேலைகள் ஏதேனும் இருந்தால் விடுமுறை நாட்கள் பற்றித் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவது நல்லது.

Trending News

Latest News

You May Like