1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அதிரடியாக மாற்றம்..!

Q

நீலகிரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் அனுப்பியுள்ள ஆணையின் விபரம் இதோ:
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி சுஜித் குமார், சென்னை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்.பி.யாக கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக ஆதர்ஷ் பெசேரா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கவுதம் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்ட எஸ்.பி.யாக அருண் கபிலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பிரபாகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக மகேஷ்வரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக மதிவாணன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

Trending News

Latest News

You May Like