1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்..!

1

சென்னை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு பாசஞ்சர் ரயில், மறுமார்க்கமாக, திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு பாசஞ்சர் ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13 முதல் ஆக.10-ம் தேதி வரைமாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16203), திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16204) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு ஜூலை 13-ம் தேதி முதல்ஆக.10-ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(16057) ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு ஜூலை 13-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை காலை 10.10 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில்(16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் ரேணிகுண்டாவில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும்.

இதுதவிர, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like