1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகளில் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு !

அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகளில் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு !

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்பப் பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவித்துள்ளது.

தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மூ காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்சன் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகள் மாற்றபட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகளில் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு !
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின்போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்பட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பென்சன் விதிகளில் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் உத்தரவு !
காணாமல் போன மத்திய அரசு ஊழியர் மீண்டும் வந்துவிட்டால், இடைப்பட்ட காலத்தில் குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளப்படும் என புதிய விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதுவே இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தில் தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது. மாறாக, அவர் தொலைந்து ஏழு ஆண்டுகள் கழிந்து அல்லது அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like