1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 13ஆம் தேதி இல்ல ஜூலை 14-ல் விண்ணில் பாய்கிறது சந்திரயான் -3..!

1

பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன. இந்தியாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், ஒருநாள் தாமதமாக வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நிலவில் இறங்கும்போது அதன் ரோவர் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சந்திரயான்-3 என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விண்கலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான்-3 குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், "சந்திரனைப் பற்றிய நமது புரிதலை சந்திரயான்-3 மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்குவதாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையைப் பயன்படுத்தி சந்திரயான்-3 ஏவப்பட உள்ளது" என்றார்.

Trending News

Latest News

You May Like