நாம் பார்த்த நிலா இதுதான்..!! நிலாவை போட்டோ பிடித்த சந்திராயன் 3..!!

சென்னை அருகேவுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சந்திராயன் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து அந்த விண்கலம் பூமியின் நீள்வட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அவ்வப்போது இடைவெளிவிட்டு நிலவை நோக்கி ஒவ்வொரு சுற்றாக விரிவு செய்யப்பட்டு வந்தது.
கடந்த 5-ம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றுவிட்டதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்தது. இந்நிலையில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் போது விண்கலம் படம் பிடித்த காணொளி காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப கேமராக்கள் கொண்டு எடுக்கப்பட்டுள்ள வீடியோவில், அதில் நிலவின் தரைப்பகுதி பசுமை கலந்த நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. விண் கற்களால் ஏற்பட்ட பள்ளத்தாக்குகளும் மேடுகளும் கூட அந்த காணொளியில் காண முடிந்தது.
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
சந்திராயன் 3 பயண வரலாற்றில் இதுவொரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்நேற்று இரவு 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் சந்திரயான் 3 விண்கலத்தின் நிலவின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 17-ம் தேதிக்கு பிறகு விண்கலம் இரண்டாக பிரியும். வரும் 23-ம் தேதி இரவில் சந்திராயன் 3 நிலவின் தரையிறங்கும். அந்த அரிய நிகழ்வைக் காண உலகமே உற்றுநோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.