1. Home
  2. தமிழ்நாடு

இந்த முறை ஆட்சியை பிடிக்கும் சந்திரபாபு நாயுடு - வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு..!

1

லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், பீகார், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

ஒரே கட்டமாகக் கடந்த மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக உடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அத்துடன் ஆந்திரா மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், 88 தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த எக்ஸிட் போல் முடிவுகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

இதுவரை வெளியான சர்வேக்களில் ஜெகனுக்கு தோல்வி என்றே கூறப்பட்டுள்ளது. Aaraa என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 94-104 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 71-81 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல People Pulse நிறுவனம் வெளியிட்ட சர்வேயில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 45-60 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 111-135 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான எக்ஸிட் போல் சர்வேக்களில் பெரும்பாலும் சந்திரபாபு நாயுடு + பாஜக கூட்டணியே ஆந்திராவில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like