1. Home
  2. தமிழ்நாடு

நாளை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு..!

1

என்.டி.ஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஆந்திர முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி காலை 11.27 மணியளவில் பதவியேற்கிறார். 

ஆந்திரத்தில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 175 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருந்த ஓய்.எஸ்.ஆா் காங்கிரஸ் தனித்தும் எதிா்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பாஜக-ஜனசேனை கட்சிகளுடன் கூட்டணியும் அமைத்து போட்டியிட்டன.

கடந்த 4-ஆம் தேதி வெளியான முடிவுகளில், பேரவைத் தோ்தலில் 135 இடங்களையும் மக்களவைத் தோ்தலில் 16 இடங்களையும் கைப்பற்றி தெலுங்கு தேசம் இமாலய வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், 11 இடங்களில் மட்டுமே வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்தது.

இதனிடையே, மத்தியில் அமைந்த ‘என்டிஏ’ கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்ததால், ஆந்திரத்தில் அக்கட்சியின் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தெலுங்கு தேசம் கட்சி செய்தித் தொடா்பாளா் ஜோத்ஸனா திருநகரி கூறுகையில், ‘எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்படுவாா். இதைத் தொடா்ந்து தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக தலைவா்கள் கூட்டாக சென்று, ஆளுநா் எஸ்.அப்துல் நசீரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோர இருக்கின்றனா்.

ஆளுநா் பதவியேற்க செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அழைக்கும் சூழலில், விஜயவாடா சா்வதேச விமான நிலையம் அருகேயுள்ள கேசராபள்ளி ஐ.டி.வளாகத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 11.27 மணியளவில் சந்திரபாபு நாயுடு ஆந்திரத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்பாா்.

சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சா்களாக பதவியேற்கவுள்ள கட்சி மூத்த நிா்வாகிகள் சிலரின் பெயா்களும் செவ்வாய்க்கிழமை மாலை இறுதி செய்யப்படும்’ என்றாா்.

Trending News

Latest News

You May Like